இந்தியா
பர்கான் நினைவு தினம்: சமூக வலைத்தளங்களுக்கு காஷ்மீரில் தடை
பர்கான் நினைவு தினம்: சமூக வலைத்தளங்களுக்கு காஷ்மீரில் தடை
காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதின் பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த பர்கான் வானி கடந்த ஆண்டு ஜூலை மாதம் 8-ம் தேதி பாதுகாப்பு படையால் சுட்டுக் கொல்லப்பட்டான். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காஷ்மீரில் ஒரு பகுதியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
வரும் 8-ம் தேதி முதலாம் ஆண்டு நினைவு நாள் வருவதையொட்டி, காஷ்மீரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். கூடுதலாக 21 ஆயிரத்திற்கும் அதிகமான துணை ராணுவப்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து இன்று நள்ளிரவு முதல் சமூக வலைத்தளங்களுக்கு காஷ்மீரில் தடை விதிக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்களுக்கு 10 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.