சர்ச்சையில் அருந்ததி பட்டாச்சார்யாவின் ரிலையன்ஸ் நியமனம்

சர்ச்சையில் அருந்ததி பட்டாச்சார்யாவின் ரிலையன்ஸ் நியமனம்
சர்ச்சையில் அருந்ததி பட்டாச்சார்யாவின் ரிலையன்ஸ் நியமனம்

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் தலைவராக இருந்தவர் அருந்ததி பட்டாச்சார்யா. இந்திய வங்கி ஒன்றை நிர்வகித்த முதல் பெண் என்ற பெருமையும் அருந்ததிக்கு உண்டு. தற்போது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தின் கூடுதல் இயக்குநராக பொறுப்பேற்றுள்ளார். இந்த நியமனம் மூலம் ரிலையன்ஸ் நிறுவனத்தில் பணியில் உள்ள 2வது பெண் இயக்குநர் என்ற பெருமையும் பெற்றுள்ளார்

அருந்ததியின் நியமனம் அறிவிப்பு வெளியானது முதல் அவரது நியமனம் குறித்து சமூக வலைத்தளங்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு கடன் வழங்கியதற்கு கைமாறாக இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவு குற்றம் சாட்டப்படுகிறது. குறிப்பாக இந்தியாவில் அரசின் உயர் பொறுப்புகளில் இருப்போர் 1 ஆண்டு காலம் எந்த தனியார் நிறுவனத்திலும் பணியாற்றக் கூடாது என விதி உண்டு. அருந்ததி பட்டாச்சார்யா ஓய்வு பெற கடந்த 6-ம் தேதியோடு ஒரு ஆண்டு ஆனதால் அவரது நியமனத்தில் சிக்கல் இல்லை.

ஒரு ஆண்டு காலம் முடிந்த சில நாட்களில் ரிலையன்ஸ் நிறுவனம் ஏன் அவரை பணிக்கு அமர்த்தியது ? இவ்வளவு அவசரம் காட்டப்பட்டது ஏன் ? என பல கேள்விகள் கேட்கப்படுகின்றன. குறிப்பாக 3 ஆண்டுகள் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு கடன் பெறும் வரம்பை தாண்டி எஸ்.பி,ஐ வங்கி கடன் கொடுத்தது ஏன் என்றும் வாராக்கடனை அதிகரிக்க செய்ய ரிலையன்சின் கடன் முக்கியமாக இருந்தது என்றும் விமர்சனங்கள் வைக்கப்படுகிறது. 

அதே நேரத்தில் அருந்ததி பட்டாச்சார்யா தற்போது ஸ்டேட் வங்க் பொறுப்பில் இல்லாத நிலையிலும், தனியார் நிறுவனம் ஒன்றில் சேர்வதற்கான கால அளவை அவர் தாண்டிவிட்டதாலும் , அவர் மீது குற்றம் சுமத்துவது தேவையற்றது என சிலர் தெரிவிக்கிறார்கள். ஆனால் சமூக வலைத்தள வாசிகள் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு செய்த உதவிக்காக அருந்ததிக்கு இத்தனை பெரிய பதவி கொடுக்கப்பட்டதாக விமர்சித்து வருகின்றனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com