3 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தப்பியவரை மோப்ப நாய் உதவியுடன் கைது செய்த போலீஸ்!

3 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தப்பியவரை மோப்ப நாய் உதவியுடன் கைது செய்த போலீஸ்!
3 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தப்பியவரை மோப்ப நாய் உதவியுடன் கைது செய்த போலீஸ்!

3 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பி ஓடிய 38 வயது நபரை மோப்ப நாய் உதவியுடன் மகாராஷ்டிரா போலீசார் கண்டறிந்துள்ளனர்.

மும்பை தானே பகுதியில் உள்ள குடிசைப்பகுதியில், தனது பெற்றோருடன் 3 வயது சிறுமி ஒருவர் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 38 வயது நபர் ஒருவர் சிறுமியை தூக்கிச் சென்றார். இதனைப்பார்த்த சிறுமியின் தாயார் மற்றும் அவரது உறவினர்கள் அலறியடித்து அந்த நபரை துரத்தி சென்றனர்.

(கோப்புபுகைப்படம்)

ஆனால், அந்த நபர் அவர்களிடம் இருந்து சிறுமியுடன் தப்பித்துச் சென்றார். அதன் பின்னர் சிறுமியை அருகே உள்ள வயல் வெளியில் இருந்து மீட்டப் பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு சேர்த்தனர். மேலும், அடையாளம் தெரியாத மர்ம நபர், தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல்நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது அங்கிருந்து, ஒரு ஜோடி செருப்பை கண்டறிந்தனர். அதனைத்தொடர்ந்து சந்தேகத்திற்கு இடமான மூன்று நபர்களை கைது செய்து சிறுமியின் தாயார் முன்னிலையில் நிறுத்தினர்.

ஆனால் சிறுமியின் தாயாரால் குற்றவாளியை அடையாளம் காண இயலவில்லை. அதனைத்தொடர்ந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, அதனிடம் சம்பவ இடத்தில் கிடைத்த செருப்பு காண்பிக்கப்பட்டது. அதை நுகர்ந்த நாய் நேராக சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய நபரின் குடிசைப்பகுதியை நோக்கிச் சென்றது. அவரை கைது செய்த காவல்துறையினர், அவர் மீது 376 மற்றும் 363 ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறும் போது, “ குற்றம்சாட்டப்பட்டவர் மதுவுக்கு அடிமையாக இருந்துள்ளார். தொழிற்சாலையில் தினக்கூலியாக பணியாற்றி வந்த அவரின் மனைவி அண்மையில்தான் அவரை விட்டு பிரிந்துள்ளார்.

சம்பவத்தினத்தன்று சிறுமியைத் தூக்கிச் சென்றவர், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து அங்குள்ள வயல்வெளியில் விட்டு விட்டு, அதன் பின்னர் அவரது குடிசைப்பகுதிக்கு சென்றுள்ளார்.” என்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com