அமேதியிலேயே சொந்த வீடு கட்டும் ஸ்மிருதி இரானி

அமேதியிலேயே சொந்த வீடு கட்டும் ஸ்மிருதி இரானி

அமேதியிலேயே சொந்த வீடு கட்டும் ஸ்மிருதி இரானி
Published on

உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் ஸ்மிருதி இரானி போட்டியிட்டார். 

இதில், சுமார் 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்மிருதி ரானி ராகுலை தோற்கடித்தார். இதன்மூலம் பல ஆண்டுகளாக காங்கிரஸ் வசம் இருந்த அமேதி தொகுதியை பாஜக கைப்பற்றியது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இத்தொகுதியில் 2004-ம் ஆண்டில் இருந்து எம்.பி.யாக இருந்து வந்தார். அவரை எதிர்த்து கடந்த முறையும் ஸ்மிருதி இரானி பாஜக சார்பில் போட்டியிட்டார். 

ஆனால் தோல்வி அடைந்தார். இந்த முறை ஸ்மிருதி இரானி ராகுலை தோற்கடித்தது பாஜகவிற்கு பெரும் விருந்தாக அமைந்தது. நாடாளுமன்ற மக்களவையில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உறுப்பினராக பதவியேற்றுக் கொள்ள வந்தபோது, சக உறுப்பினர்கள் நீண்ட நேரம் கைதட்டி அவரை உற்சாகப்படுத்தினர். 

இதையடுத்து மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தனது தொகுதியின் மீது சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார். அதன்படி அமேதியிலேயே சொந்த வீடு கட்டும் நடவடிக்கையில் ஸ்மிருதி இரானி இறங்கியுள்ளார். அவருக்கு ஏற்கனவே கவுரிகஞ்சில் வீடு இருக்கிறது. 

உத்திரபிரதேசத்தில் ரூ. 30 கோடி சாலை திட்டத்தின் தொடக்கவிழாவில் அம்மாநில துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியா ஆகியோர் முன்னிலையில் இந்த அறிவிப்பை ஸ்மிருதி இரானி அறிவித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com