கர்நாடகா முழுவதும் புகைப்பிடிக்கத் தடை!

கர்நாடகா முழுவதும் புகைப்பிடிக்கத் தடை!

கர்நாடகா முழுவதும் புகைப்பிடிக்கத் தடை!
Published on

கர்நாடகா மாநிலம் முழுவதும் புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் இது உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும் அம்மாநில அமைச்சர் யு.டி.காதர் தெரிவித்தார்.

கர்நாடகத்தில் புகையிலை பொருட்கள் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது குறித்து நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, நகர மேம்பாட்டு துறை அமைச்சர் யு.டி.காதர், ‘கர்நாடக மாநிலம் முழுவதும் பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது’ என்றார். 

அவர் மேலும் கூறும்போது, ‘மாநிலம் முழுவதும் புகையிலை பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மதுபான விடுதி, உணவகம், கேளிக்கை விடுதிகளின் உரிமையாளர்கள் முறை யாக பின்பற்ற வேண்டும். பெங்களூரு மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஏற்கனவே புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள் ளது. இந்த உத்தரவு உடனடியாக மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்படுகிறது’ என்றார். 

முன்னதாக மாநில அரசு இதுபற்றி கேளிக்கை விடுதிகளின் உரிமையாளர்களுக்கு  சுற்றறிக்கை அனுப்பியது. அதில், 30-க்கும் மேற்பட்ட இருக் கைகளை கொண்ட மதுபான விடுதி, உணவகம், கேளிக்கை விடுதிகளில் புகைப்பிடிக்க தனியாக இடம் ஒதுக்க, சட்டத்தில் இடம் உள்ளது. தனியாக இடம் ஒதுக்க சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு, தீயணைப்பு துறையிடம் அனுமதி பெற வேண்டும். மீறினால் உரிமம் ரத்து செய்யப் படும்’ என்று கூறப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com