பெண்களின் சுமையை குறைக்கும் ‘ஸ்மார்ட் கிச்சன்’ திட்டம் - முனைப்பு காட்டும் பினராயி விஜயன்

பெண்களின் சுமையை குறைக்கும் ‘ஸ்மார்ட் கிச்சன்’ திட்டம் - முனைப்பு காட்டும் பினராயி விஜயன்
பெண்களின் சுமையை குறைக்கும் ‘ஸ்மார்ட் கிச்சன்’ திட்டம்  - முனைப்பு காட்டும் பினராயி விஜயன்

கேரளாவில் மீண்டும் ஆட்சி அமைத்துள்ள முதலமைச்சர் பினராயி விஜயன் தங்களுடைய தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட ஸ்மார்ட் கிச்சன் திட்டத்தை ஜூலை 10ஆம் தேதி நடைமுறைக்கு கொண்டுவருவது பற்றி செயலாளர் அளவிலான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்தாலோசித்துள்ளார்.

இதுபற்றி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், பெண்களின் வீட்டு வேலையைக் குறைக்கவே இந்த திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதில், ‘’ ஜூலை 10 ஆம் தேதிக்குள் ஸ்மார்ட் கிச்சன் திட்டத்தை செயல்படுத்த மூன்று பேர்கொண்ட செயலாளர் நிலை குழு வழிகாட்டுதல்களையும் பரிந்துரைகளையும் அளிக்கும். இது பெண்களின் வீட்டு பணிச்சுமையைக் கணக்கிட்டு, அதைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு இயங்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு முந்தைய ட்விட்டர் பதிவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட அனைத்து திட்டங்களையும் தவறாமல் செயல்படுத்தும் என்று குறிப்பிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது ஸ்மார்ட் கிச்சன் திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com