எஸ்.எம். கிருஷ்ணாபுதிய தலைமுறை
இந்தியா
கர்நாடகா முதல்வர் To மகாராஷ்டிரா ஆளுநர் | எஸ்.எம். கிருஷ்ணா காலமானார்!
கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா தனது 92 வயதில் காலமானார் என்று செய்த வெளியாகியுள்ளது.
கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா தனது 92 வயதில் காலமானார் என்று செய்த வெளியாகியுள்ளது.
1999 -2004 வரை கர்நாடகாவின் முதல்வராகவும், அதனையடுத்து 2004 - 2008 வரை மகாராஷ்டிரா ஆளுநராகவும், 2009 -2012 வரை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர் எஸ்.எம்.கிருஷ்ணா. இவர், 2023 ஆம் ஆண்டு நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷன் விருதையும் பெற்றுள்ளார்.
அதுமட்டுமல்ல, சபாநாயகராகவும், பல முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். இவர் சில நாட்களுக்கு முன்பு பெங்களூரில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பிறகு வீடு திரும்பினார்.
இந்தநிலையில்தான் , இன்று அதிகாலை 3 மணியளவில் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.