இந்தியாவில் சற்றே குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு

இந்தியாவில் சற்றே குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு

இந்தியாவில் சற்றே குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு
Published on

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு சற்று குறைந்துள்ளது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 3,68,147 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி, இந்தியாவில், கடந்த 24 மணிநேரத்தில் 3 லட்சத்து 68 ஆயிரத்து 147 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு ஒரு கோடியே 99 லட்சத்து 25 ஆயிரத்து 604 ஆக அதிகரித்திருக்கிறது.

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 3,417 பேர் உயிரிழந்ததையடுத்து மொத்த உயிரிழப்பு 2 லட்சத்து 18 ஆயிரத்து 959 ஆக உயர்ந்தள்ளது. தற்போது 34 லட்சத்து 13 ஆயிரத்து 642 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். நாட்டில் கொரோனாவில் இருந்து ஒரு கோடியே 62 லட்சத்து 93 ஆயிரத்து 3 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை 15 கோடியே 71 இலட்சத்து 98 ஆயிரத்து 207 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com