அஜாக்கிரதையால் மாணவனை ஸ்கூலில் வைத்து பூட்டிச் சென்ற ஆசிரியர்: அதிர்ச்சியில் கிராமம்!

அஜாக்கிரதையால் மாணவனை ஸ்கூலில் வைத்து பூட்டிச் சென்ற ஆசிரியர்: அதிர்ச்சியில் கிராமம்!

அஜாக்கிரதையால் மாணவனை ஸ்கூலில் வைத்து பூட்டிச் சென்ற ஆசிரியர்: அதிர்ச்சியில் கிராமம்!
Published on

மூன்றாம் வகுப்பு மாணவனை வகுப்புக்குள் வைத்து பூட்டிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டம் ராம்ஜிவாலா கிராமத்தில் அரசு ஆரம்பப் பள்ளி ஒன்று உள்ளது. இங்கு அந்தப் பகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்துவருகின்றனர். அதில் ஒருவர் ஆதித்யா குமார். வயது 8. மூன்றாம் வகுப்பு படித்துவந்த ஆதித்யா, வழக்கம் போல கடந்த வியாழக்கிழமையும் பள்ளிக்குச் சென்றான்.

காலையில் உற்சாகமாக இருந்த அவன், மாலையில் கண்ணசந்து வகுப்பறையில்   அப்ப டியே தூங்கிவிட்டான். பள்ளி மணி, அடித்ததும் பக்கத்தில் எல்லோரும் சென்றுவிட்டார்கள். ஆசிரியர்களும், பள்ளியை பூட்டிவிட்டு வீட்டுக்குக் கிளம்பிவிட்டனர்.

இந்நிலையில் திடீரென்று எழுந்து பார்த்த ஆதித்யாவுக்கு அதிர்ச்சி. வகுப்பறைக் கதவு பூட்டப்பட்டு இருட்டாக இருந்தது. என்ன செய்வதென்று தெரியாத ஆதித்யா, பயத்தில் கதறி அழுதார். பள்ளியின் வெளியே சில கடைகள் இருக்கின்றன. அதில் உள்ளவர்கள் சிலர் அழுகைச் சத்தம் கேட்டு, போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சிலர் குழந்தை அழுவதையும் பள்ளியின் கதவு பூட்டப்பட்டிருப்பதையும் வீடியோவாக எடுத்து குரூப்களில் பரப்பினர். 

இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பள்ளியின் அருகே ஏராளமானோர் கூடிவிட்டனர். கூட்டத்தை சமாளித்து உள்ளே சென்ற போலீசார் கதவை உடைத்து மாணவனை மீட்டனர். பள்ளியின் அஜாக்கிரதையால் இந்த தவறு நடந்துள்ளது என்றும் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று அப்பகுதி மக்கள் போரட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பள்ளி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தை அடுத்து அவர் கள் கலைந்து சென்றனர்.

இதுபற்றி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மாவட்ட கல்வி நிர்வாகமும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.  இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com