மக்களின் அச்சத்தை போக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை -  ராஜபக்சே

மக்களின் அச்சத்தை போக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை -  ராஜபக்சே

மக்களின் அச்சத்தை போக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை -  ராஜபக்சே
Published on

ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பிறகு, நாட்டு மக்கள் அச்சத்துடனும் சந்தேகத்துடனும் இருப்பதாக, இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார். 

அம்பாந்தோட்டை பகுதியில் புதிதாக நிறுவப்பட்டுள்ள புத்தர் சிலையை திறந்து வைத்து பேசிய அவர், ஈஸ்டர் தாக்குதலுக்குப் பிறகு மக்களிடையே நிலவும் அச்சத்தை போக்க அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டினார். 

மேலும் மக்கள் சுதந்திரமாக தங்களது மத தலங்களுக்கு செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளதாகவும், அனைவரையும் தீவிரவாதிகள் போல பார்ப்பதற்கு சமூகம் பழகி வருவதாகவும் கூறினார். அனைத்து மதத்தவர்களும் நாட்டில் அச்சமின்றி வாழ உரிமையை பெற்றுக் கொடுப்பதும், தேச பாதுகாப்பை உறுதி செய்வதும்தான் தமது பிரதான கடமை என ராஜபக்சே தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com