4 வயது சிறுமிக்கு மண்டை ஓட்டை பிரித்து சிகிச்சை..!
அரிதிலும் அரிதாக நடைபெறும் மண்டை ஓட்டு அறுவை சிசிச்சை 4 வயது சிறுமிக்கு மேற்கொள்ளப்பட்டது. தற்போது அந்த சிறுமி நலமுடன் உள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் புனே பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமி இஷிதா ஜவாலே. சமீபத்தில் நடைபெற்ற விபத்து ஒன்றில் இஷிதாவின் தலையில் அடிபட்டது. இதனையடுத்து சிறுமி இஷிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இஷிதாவின் மண்டையில் இரத்த உறைவு ஏற்பட்டிருப்பதாவும், விரைவில் அறுவை சிசிக்சை செய்தாக வேண்டும் எனவும் தெரிவித்திருக்கின்றனர். இல்லையென்றால் இஷிதாவின் உயிருக்கே ஆபத்தாக அது அமைந்துவிடும் என கூறியிருக்கின்றனர். இதனையடுத்து பெற்றோர் சம்மதம் தெரிவிக்க மருத்துவர்கள் அறுவை சிகிச்சைக்கு தயாரானர்.
இரத்த உறைவை நீக்க வேண்டுமானால் மண்டை ஓட்டின் எலும்புகளை பிரிக்க வேண்டியது கட்டாயம். அதன்படி மண்டை ஓட்டின் எலும்புகளை பிரித்து சிறுமிக்கு மருத்துவம் பார்த்துள்ளனர் மருத்துவர்கள். பின் சிறுமிக்கு பழைய முக அமைப்பையே கொண்டுவர பாலியெத்திலின் எலும்பை கொண்டு மண்டை ஓட்டில் அதற்கேற்றவாறு பொருத்தியுள்ளனர் மருத்துவர்கள். தற்போது சிறுமி நலமுடன் உள்ளார்.
இதுகுறித்து சிகிச்சையளித்த மருத்துவர் விஷால் கூறும்போது, “சிறுமிக்கு மிக குறைந்த வயதுதான். இருப்பினும் மண்டையில் உள்ள ரத்த உறைவால் அவள் மிகவும் கஷ்டப்பட்டாள். பின்னர் நீண்ட விவாதத்திற்கு பின் சிறுமிக்கு அறுவை சிகிச்சையளிக்க முடிவெடுத்தோம். தற்போது சிறுமி நலமுடன் உள்ளார்” என தெரிவித்தார்.