
நந்தியாலாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சந்திரபாபு நாயுடு, ஆர்.கே.நகரில் உள்ள விழா அரங்கில் தங்கியிருந்தார். இந்நிலையில் நேற்றிரவு, டிஐஜி ரகுராமி ரெட்டி, மாவட்ட எஸ்பி ரகுவீர ரெட்டி ஆகியோர் மற்ற போலீஸ் அதிகாரிகளுடன் அவர் தங்கியிருந்த இடத்திற்கு வந்தனர். இதையடுத்து திறன் மேம்பாட்டு நிதி மோசடி தொடர்பான வழக்கில் தங்களை கைது செய்ய வேண்டும் என்று கூறினர்.
வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் நிலையில் எவ்வாறு கைது செய்வீர்கள் என்று சந்திரபாபு கேள்வி எழுப்பினார். இதையடுத்து வழக்குப் பதிவுகள் மற்றும் எப்.ஐ.ஆர் நகலை காண்பிக்க வேண்டுமென வழக்கறிஞர்கள் கேட்டுள்ளனர். அதற்கு ரிமாண்ட் ரிப்போர்ட் கொடுக்க முடியாது என போலீசார் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து தெலுங்கு தேசம் கட்சி தலைவர்களை கைது செய்த போலீசார் அவர்களை அங்கிருந்து அழைத்துச் சென்ற நிலையில், சந்திரபாபு நாயுடுவையும் கைது செய்து விஜயவாடாவுக்கு அழைத்துச் சென்றனர்.