இந்தியா முழுவதும் 63 மாவட்டங்களில் ஒரு ரத்தவங்கி கூட இல்லை - மாநிலங்களவையில் தகவல்

இந்தியா முழுவதும் 63 மாவட்டங்களில் ஒரு ரத்தவங்கி கூட இல்லை - மாநிலங்களவையில் தகவல்

இந்தியா முழுவதும் 63 மாவட்டங்களில் ஒரு ரத்தவங்கி கூட இல்லை - மாநிலங்களவையில் தகவல்
Published on

நாடு முழுவதிலும் 63 மாவட்டங்களில் ஒரு ரத்த வங்கி கூட இல்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

மாநிலங்களவையில் சுகாதாரத்துறை அமைச்சகம் தாக்கல் செய்த அறிக்கை ஒன்றில் இந்த தகவல் கிடைத்திருக்கிறது. நாட்டிலேயே அதிகபட்சமாக அருணாச்சல பிரதேச மாநிலத்தில் 14 மாவட்டங்களில் ரத்த வங்கிகள் இல்லை. அடுத்ததாக மணிப்பூர் மாநிலத்தில் 12 மாவட்டங்களில் ரத்த வங்கிகள் இல்லை. நாகாலாந்தில் 9 மாவட்டங்களிலும் மேகாலயாவில் 7 மாவட்டங்களிலும் அஸ்ஸாம் மற்றும் பீகார் மாநிலங்களில் தலா ஐந்து மாவட்டங்களிலும் ஒரு ரத்த வங்கி கூட இல்லை.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 4 மாவட்டங்களிலும் குஜராத் மற்றும் மத்திய பிரதேச மாநிலத்தில் இரண்டு மாவட்டங்களிலும் சத்தீஸ்கர், ஹரியானா, இமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு மாவட்டங்களிலும் ரத்த வங்கிகள் இல்லை. கடந்த 2019-20ம் ஆண்டுகளில் 3321 உரிமம் பெற்ற ரத்த வங்கிகள் 1.27 கோடி யூனிட் ரத்தம் பெற்றுள்ளது. ரத்த வங்கி குறித்த கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக சுகாதார அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே இந்த தகவலை தெரிவித்தார்.

மேலும், ''பொது சுகாதாரம் என்பது மாநில அரசின் பட்டியலில் உள்ளது. எனவே தேவைக்கேற்ப ரத்த வங்கிகளை நிறுவுவதை உறுதி செய்வது மாநில அரசுகளின் முதன்மை பொறுப்பு, ஆனாலும் மாநில அரசுகள் கோரிக்கைகள் விடுக்கும்பட்சத்தில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் உதவிகள் செய்யப்படும். இதுவரை ரத்த வங்கிகளில் ரத்தம் கிடைக்கவில்லை என்ற புகார் வந்ததில்லை. தன்னார்வ அமைப்புகள் மூலம் 24 மணி நேரமும் ரத்தம் கிடைப்பதை உறுதி செய்கிறோம்'' என தெரிவித்தார்

ரத்த வங்கிகள் இல்லாத மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் உட்பட எந்த ஒரு தென் மாநிலங்களும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com