\
சிக்கிம்: ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து - 16 வீரர்கள் உயிரிழப்பு!

சிக்கிம்: ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து - 16 வீரர்கள் உயிரிழப்பு!

சிக்கிம்: ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து - 16 வீரர்கள் உயிரிழப்பு!
Published on

சிக்கிம் மாநிலத்தில் ராணுவ வாகனம் ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்த விபத்தில் 16 வீரர்கள் உயிரிழந்தனர். 4 வீரர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

சாட்டன் என்ற இடத்திலிருந்து தங்கு என்ற பகுதிக்கு ராணுவ வீரர்களின் வாகனம் சென்று கொண்டிருந்தது. மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தபோது ஸேமா என்ற இடத்தில் குறுகிய வளைவை கடந்தபோது, வாகனம் தடுமாறியது. அப்போது பள்ளத்தாக்கில் வாகனம் பாய்ந்ததில் 16 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக மீட்புக்குழுவினர் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டனர். விபத்து நடந்த இடம் பள்ளத்தாக்கு என்பதால், வான்வழியாக சென்று மீட்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. விபத்தில் சிக்கிய ராணுவ வாகனத்தில் இருந்து 4 வீரர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். ராணுவ வீரர்கள் 16 பேர், விபத்தில் உயிரிழந்தது குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com