மேகாலயா காட்டில் குழி வெட்டும் பணியில் ஈடுபட்ட ஆறு புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழப்பு

மேகாலயா காட்டில் குழி வெட்டும் பணியில் ஈடுபட்ட ஆறு புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழப்பு
மேகாலயா காட்டில் குழி வெட்டும் பணியில் ஈடுபட்ட ஆறு புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழப்பு

மேகாலயாவின் கிழக்கு ஜெயந்தியா மலை பகுதியில் குழி வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த ஆறு புலம் பெயர் தொழிலாளர்கள் மண் சரிவு ஏற்பட்டதால் அந்த குழிக்குள்ளேயே உயிரிழந்துள்ளனர்.

கடந்த 2018-இல் இதே மாவட்டத்தில் 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குழி வெட்டியபோது மண்ணுக்குள் புதைந்துள்ளனர். சட்டத்திற்கு புறம்பாக வனப்பகுதியில் நிலக்கரி சுரங்கம் வெட்ட முயன்ற போது இந்த அசாம்பாவிதம் ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். 

இந்த குற்றச்சாட்டை அரசு மறுத்துள்ளதோடு அந்த பகுதியில் வேறு சில பணிகளை அவர்கள் மேற்கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது என அரசு தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

தேசிய பசுமை தீர்ப்பாயம் மேகாலயாவில் நிலக்கரி சுரங்கம் வெட்ட தடை விதித்துள்ளது. இருப்பினும் சட்டத்திற்கு புறம்பாக அந்த பணிகள் மேகாலயாவில் நடப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சொல்கின்றனர். இந்த விபத்து நடைபெற்றுள்ள  கிழக்கு ஜெயந்தியா மலை பகுதியில் மட்டும் 5000க்கும் மேற்பட்ட சட்டத்திற்கு புறம்பான நிலக்கரி சுரங்கம் இருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com