தேவையின்றி அழைப்பார் - மத்திய அமைச்சருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு

தேவையின்றி அழைப்பார் - மத்திய அமைச்சருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு

தேவையின்றி அழைப்பார் - மத்திய அமைச்சருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு
Published on

மத்திய வெளியுறவுத்துறை இணயமைச்சராக இருப்பவர் எம்.ஜே.அக்பர். இவர் பத்திரிகையாளராகவும் இருந்துள்ளார். கடந்த சில நாட்களாக பத்திரிகை துறையில் வேலை செய்யும் பெண்கள், பணியிடங்களில் தங்களுக்கு ஏற்பட்ட விரும்பத்தகாத பாலியல் வன்கொடுமைகள் மற்றும் துன்புறுத்தல்கள் குறித்தும் பேசி வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் இது குறித்து பதிவிட்டு வருகின்றனர். 

மத்திய அமைச்சரான எம்.ஜே.அக்பர் பத்திரிகைகளில் ஆசிரியராக பணியாற்றியவர். தனது பணிக்காலத்தில் பெண்கள் பலருக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தார் என பிரியா என்பவர் முதன்முதலில் ட்விட்டரில் தெரிவித்தார். அதில் “வேலைக்கான நேர்காணல் என கூறி மும்பையில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்தார் , நான் வரவேற்பறையில் அமர்ந்திருந்தேன், தனது அறைக்கு வருமாறு எனக்கு போன் வந்தது, நான் சென்றபோது மதுகுடிக்க சொன்னார், சில இந்தி பாடல்களை பாடினார், நான் மறுக்கவே தனது படுக்கையில் அமரச் சொன்னார், அதனையும் மறுத்து விட்டேன் என தெரிவித்துள்ளார்

அக்பர் குறித்து மற்றொரு பெண்ணான காலட் என்பவர் “ அக்பரோடு மூன்று ஆண்டுகள் நான் பணிபுரிந்துள்ளேன் ; ஒருமுறை என்ன ஹோட்டலுக்கு அழைத்தார், காலை உணவை சேர்ந்து உட்கொள்ளலாம் என அவர் சொன்ன போது நான் சம்மதித்தேன், ஆனால் பின்னர்தான் விபரீதத்தை உணர்ந்தேன், அதனால் வர முடியாது என மறுத்ததோடு, தூங்கிவிட்டதாக அவரிடம் தெரிவித்தேன்” என்றார்.

இன்னும் சிலர் “அக்பர் தனது பணிக்காலத்தில் தேவையில்லாமல் அழைத்து பேசுவார், ஊதிய உயர்வு இருக்கும் ; தனது அறைக்கு அழைத்த அவர் மார்பகங்களை பார்க்கும் பழக்கத்தை கொண்டிருந்தார் ; ஒருமுறை டி.சர்ட் அணிந்திருந்த போது என்னை அழைத்து மேலும் கீழும் பார்த்தார். எனக்கு அது மிகுந்த அசௌகரியத்தை ஏற்படுத்தியது, உடனடியாக அறையில் இருந்து வெளியேறிவிட்டேன், எனது தோழி ஒருவர் ஷார்ட்ஸ் அணிந்து அலுவலகம் வந்திருந்தார். அவர் அருகில் வந்த அக்பர் எதையோ கீழே போட்டுவிட்டு அவரது உடல் பாகங்களை பார்த்த பார்வை எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது” என்றார்

அவரை தொடர்ந்து இன்னும் சிலர் அக்பரோடு நடந்த விஷயங்கள் குறித்து வெளிப்படையாக பேசினர். ஆனால் இதுவரை மத்திய அமைச்சர் தரப்பில் இந்த விவகாரங்கள் குறித்து எந்த பதிலும் கூறப்படவில்லை. இதற்கிடையில் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் இது குறித்து கேட்ட போது எந்த பதிலும் தெரிவிக்காமல் சென்று விட்டார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com