ஹரியானா: 1.6 லட்சம் பறவைகளை அழிக்க முடிவு

ஹரியானா: 1.6 லட்சம் பறவைகளை அழிக்க முடிவு

ஹரியானா: 1.6 லட்சம் பறவைகளை அழிக்க முடிவு
Published on

இந்தியாவில் கேரளா உட்பட ஆறு மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளது உறுதியாகியுள்ளது.

பாதிப்பு நிலையை அறிய சம்பந்தப்பட்ட மாநிலங்களோடு மத்திய அரசு ஆலோசனை நடத்தியுள்ளது. இதில் நோய் தோற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளையும் மத்திய அரசு மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்ததாக சொல்லப்பட்டுள்ளது. 

கேரளா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஹிமாச்சல் பிரதேசம், ஹரியானா, குஜாரத் உட்பட ஆறு மாநிலங்களில் பறவை காய்ச்சல்  பரவி இருப்பதாக தெரிகிறது.  அதில் ஹரியானாவில் 1.6 லட்சம் பாதிக்கப்பட்ட பறவைகளை கொல்லவும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும் இந்த காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

அதேபோல கேரளாவில் இந்த காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் பறவைகள் அழிக்கப்பட்டுள்ளன. அதோடு அந்த பகுதியில் கிருமி நாசினியும் தெளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தலைநகர் டெல்லியில் 20க்கும் மேற்பட்ட காகம் உயிரிழந்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல பாதிக்கப்பட்ட இடங்களில் மத்திய குழுக்கள் கள ஆயவையும் மேற்கொண்டு வருகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com