\
அல்-கய்தா தலைவர் உட்பட 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

அல்-கய்தா தலைவர் உட்பட 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

அல்-கய்தா தலைவர் உட்பட 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
Published on

காஷ்மீரில் அல்கய்தா இயக்கத்துடன் தொடர்புடைய 6 பயங்கரவாதிகள் இன்று காலை சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் டிரால் அருகே பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலை அடுத்து, பாதுகாப்பு படையினர் அங்கு சென்றனர். பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை சுற்றி வளைத்து இன்று காலை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு படையினரை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர்.

பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். நீண்ட நேரம் நடந்த இந்தச் சண்டையில் 6 பயங்கரவாதிகள் கொல்லப் பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. 

கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் ஆரம்போரா டிரால் பகுதியைச் சேர்ந்த சோலிஹா அங்கூன், ஃபைசல், நதீம் சோஃபி, ரஃப், உமர், ரசிக் மிர் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவரும் அல்-கய்தா இயக்கத்துடன் இணைந்த ஜாகிர் மூசா தலை மையிலான அன்சார் கஸ்வாத் உல் ஹிந்த் என்ற பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள்.

இதில் ஒரு பயங்கரவாதி, இந்த அமைப்பின் தலைவர்களில் ஒருவன் என்றும் இவர்களை கண்டுபிடிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தந்ததாகவும் காஷ்மீர் ஐ.ஜி, எஸ்.பி.பானி தெரிவித்துள்ளார்.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com