இந்தியா
நீர்வீழ்ச்சியில் குளித்தபோது விபரீதம் - நீரில் அடித்து சென்ற 6 பேர்
நீர்வீழ்ச்சியில் குளித்தபோது விபரீதம் - நீரில் அடித்து சென்ற 6 பேர்
கோவாவை சேர்ந்த 6 சுற்றுலா பயணிகள் கர்நாடகவில் உள்ள நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
கோவாவிலிருந்து 40 பேர் கர்நாடகா மாநிலத்திற்கு சுற்றுலா வந்துள்ளனர். இதில் சில பேர் சென்டியா கிராமத்தில் உள்ள நாகர்மாடி நீர்வீழ்ச்சியில் குளித்துள்ளனர். அப்போது திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 6 பேர் நீரில் மூழ்கி பலியானார்கள். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். 2 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். மற்றவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.