\
உத்தரப்பிரதேசம் கலவரம்: 6 பேர் உயிரிழப்பு

உத்தரப்பிரதேசம் கலவரம்: 6 பேர் உயிரிழப்பு

உத்தரப்பிரதேசம் கலவரம்: 6 பேர் உயிரிழப்பு
Published on

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த போராட்டம் வன்முறை வெடித்தது. போராட்டத்தின் போது 6 பேர் உயிரிழந்திருப்பதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. குறிப்பாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் கோரக்பூர், கண்டாநகர், ஷமாரூஃப், கூனிப்பூர், இஸ்மெயில் பூர் பகுதிகளில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. கோரக்பூரில் உள்ள மசூதிக்கு தொழுகைக்கு சென்ற இஸ்லாமியர்கள், திடீரென பேரணியாக செல்ல முயன்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்த முயன்றதால், இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. காவல்துறையினரை நோக்கி கற்களை வீசப்பட்டன. வாகனங்கள் நொறுக்கப்பட்டன.

காவல்துறையினர் போராட்டம் நடத்தியவர்களை தடியடி நடத்தி கலைத்தனர். இதனால், அப்பகுதியே போர்களம் போல காட்சியளித்தது. புலந்த்சாகரில் நடந்த போராட்டமும் வன்முறையில் முடிந்தது. கல்வீச்சு மற்றும் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதால், அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. முசாஃபர்நகரில் 144 தடை உத்தரவை மீறி பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.

லக்னோவில் ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பை தீவிரப்படுத்தி இருக்கும் காவல்துறையினர், இணையதள சேவைகளை தற்காலிகமாக முடக்கியுள்ளனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த வன்முறையில் 6 பேர் உயிரிழந்திருப்பதாக டிஜிபி ஓ.பி.சிங் தெரிவித்துள்ளார். பதற்றம் நிலவும் பகுதிகளில் காவல் துறையினர் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com