பீகாரில் 14வயது சிறுமியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து அந்தக்காட்சியை சமூகவலைதளத்தில் பரப்பிய கொடூரர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் 14 வயது சிறுமிக்கு கடந்த ஜனவரி 31ஆம் தேதி கூட்டுப் பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது.ஆனால் இந்த விவகாரம் தற்போது தான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இயற்கை உபாதைகளை கழிக்க வெளியில் சென்ற அந்தச் சிறுமியை 6பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது.இந்தக்காட்சிகளை மொபைலில் படம்படித்த அந்தக் கும்பல் தற்போது அந்தக்காட்சிகளை வாட்ஸ் அப்பில் பரப்பியுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமியின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக கிருஷ்ணா யாதவ் என்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.மேலும் இச்சம்பத்தில் தொடர்புடைய 5பேரை தேடி வருகின்றனர்.