\
மகாராஷ்டிராவில் பதவியேற்க பட்னாவிஸுக்கு அழைப்பு விடுத்தது ஏன்? - உச்சநீதிமன்றத்தில் சிவசேனா மனு 

மகாராஷ்டிராவில் பதவியேற்க பட்னாவிஸுக்கு அழைப்பு விடுத்தது ஏன்? - உச்சநீதிமன்றத்தில் சிவசேனா மனு 

மகாராஷ்டிராவில் பதவியேற்க பட்னாவிஸுக்கு அழைப்பு விடுத்தது ஏன்? - உச்சநீதிமன்றத்தில் சிவசேனா மனு 
Published on: 

மகாராஷ்டிராவில் பட்னாவிசை பதவி ஏற்க அழைத்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிவசேனா மனு அளித்துள்ளது. 

மகாராஷ்டிராவில் காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்குமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக பாரதிய ஜனதாவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி தேவேந்திர ஃபட்னாவிஸுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவர் அஜித் பவார் பதவி ஏற்றுக்கொண்டார். இதனிடையே என்சிபியின் சட்மன்றக் குழுத் தலைவர் பதவியில் இருந்து அஜித் பவார் நீக்கப்படுவதாவும் சரத் பவார் கூறினார்.

இதைத்தொடர்ந்து ஆளுநரின் முடிவு ஒருதலைபட்சமானது எனவும் அரசியல் சாசன அமர்வுக்கு எதிரானது எனவும் சிவசேனா விமர்சனம் செய்திருந்தது. இந்நிலையில், மகாராஷ்டிராவில் பட்னாவிசை பதவி ஏற்க அழைத்ததை எதிர்த்து சிவசேனா உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com