"தேசியகீதம் கூட பாடத்தெரியாதவர்கள் கன்னடர்கள்" - ஜோஷி
கோவாவில் உள்ள இளைஞர்கள் அனைவரும் தேசியபற்று மிகுந்தவர்கள் என்று கூறியுள்ள அம்மாநில சிவசேனா தலைவர் சிவபிரசாத் ஜோஷி, கன்னடர்களுக்கு தேசியகீதம் கூட முழுமையாக பாடத்தெரியாது என குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் காவிரி நதிநீரை பகிர்ந்துக்கொள்வதில் பல ஆண்டுகளாக பிரச்சனை நிலவி வருவது போல, கோவா மாநிலத்துடனும் நதிநீரை பகிர்ந்துக்கொள்ளாமல் கர்நாடக முரண்டு பிடித்து வருகிறது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கோவா மாநில சிவசேனா தலைவர் சிவபிரசாத் ஜோஷி, கோவாவில் உள்ள இளைஞர்களும் மாணவர்களும் தேசியபற்று மிக்கவர்கள் என்றும் தேசிய நலனையே முதலில் அவர்கள் விரும்புவதாக கூறினார். மேலும் கர்நாடக இளைஞர்கள் குறித்து பேசிய அவர், அங்குள்ளவர்களுக்கு தேசியகீதம் கூட பாடத்தெரியாது, விடுதலை வீரர்கள் ஒருவரின் பெயர் கூட அங்குள்ள இளைஞர்களுக்கு தெரியாது என்றும் கூறியுள்ளார். இருமாநிலத்திற்கும் இடையே ஓடும் மஹாதாயி மற்றும் மண்டோவி ஆகிய நதிகளை பகிர்ந்துக்கொள்வதில் தான் பல ஆண்டுகளாக பிரச்சனை நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.