"விரைவில் புதிய கல்விக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படும்" பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன்
மத்திய பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு சில முக்கிய அறிவுப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துவருகிறார். இதில் கல்வி துறைக்கு சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில், “விரைவில் புதிய கல்வி கொள்கை நடைமுறை படுத்தப்படும். அத்துடன் உயர்கல்வியில் பல சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படும். மேலும் கல்வி துறைக்கான நிதி ஒதுக்கீடு மூன்று மடங்கு அதிகரிக்கப்படும்.
வெளிநாட்டு மாணவர்கள் இந்தியாவில் வந்து படிக்கும் அளவிற்கு 'Study in India ' என்ற திட்டம் மூலம் உயர்கல்வி மேம்படுத்தப்படும். அத்துடன் விரைவில் இளைஞர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் விதமாக தேசிய அளவில் ஒரு ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும். மேலும் இந்திய மாணவர்களுக்கு ரோபோடிக்ஸ் போன்ற தொழில்நுட்பங்களில் பயிற்சி அளிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.