\
சீதாராம் யெச்சூரியின் மகன் ஆஷிஷ் யெச்சூரி கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு!

சீதாராம் யெச்சூரியின் மகன் ஆஷிஷ் யெச்சூரி கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு!

சீதாராம் யெச்சூரியின் மகன் ஆஷிஷ் யெச்சூரி கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு!
Published on

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மகன் ஆஷிஷ் யெச்சூரி கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். 

தனது மூத்த மகன் ஆஷிஷ் யெச்சூரி (வயது 34) கொரோனா பாதிப்பால் உயிரிழந்து விட்டதாக சீதாராம் யெச்சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நாளிதழ் ஒன்றில் ஆஷிஷ் யெச்சூரி பணியாற்றிவந்த சூழலில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, டெல்லியை அடுத்த குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வந்தார்.  இந்த நிலையில் தனது மூத்த மகன் ஆஷிஷ் யெச்சூரி இறந்தது வேதனை அளிப்பதாக சீதாராம் யெச்சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com