சிபிஎம்-ன் பொலிட் பீரோ உறுப்பினர் பதவிக்கு முதல்முறையாக பட்டியலின நிர்வாகி தேர்வு

சிபிஎம்-ன் பொலிட் பீரோ உறுப்பினர் பதவிக்கு முதல்முறையாக பட்டியலின நிர்வாகி தேர்வு
சிபிஎம்-ன் பொலிட் பீரோ உறுப்பினர் பதவிக்கு முதல்முறையாக பட்டியலின நிர்வாகி தேர்வு

மார்க்சிஸ்ட் கட்சி மாநாட்டில் அகில இந்திய பொதுச்செயலாளராக சீதாராம் யெச்சூரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் 23வது அகில இந்திய மாநாடு கேரளா மாநிலம் கண்ணூரில் 4 நாட்கள் நடந்து முடிந்தது. இதில், அகில இந்திய தலைவர்கள், பல்வேறு மாநில நிர்வாகிகள், பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து அரசியல் நிலவரம் குறித்தும், வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், மத்திய பா.ஜ.க-வுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது

இதையடுத்து இந்த மாநாட்டில் அகில இந்திய பொதுச்செயலாளராக சீதாராம் யெச்சூரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். அதேபோல் கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் பொலிட் பீரோ உறுப்பினர் பதவிக்கு மொத்தம் 17 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் 3 பேர் புதிய உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டதில் முதல் முறையாக பட்டியலின நிர்வாகி ராமச்சந்திர டோம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

இந்தியாவில் எடுக்கும் அரசியல் ரீதியான கொள்கை முடிவுகள், தேர்தல் கூட்டணி முடிவுகள் மற்றும் உட் கட்சியின் முக்கிய முடிவுகளை எடுப்பது பொலிட் பீரோ உறுப்பினர்களின் முக்கிய பணியாகும். அதேபோல் வெளி நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சி செயல்பாடுகள் குறித்து பேசி முடிவெடுப்பதில் முக்கிய பணியாக இருந்து வருகிறது. தற்போது வர இருக்கும் 2024 நாடாளுமன்ற கூட்டணி, தேர்தல் பணிகளை முடிவெடுப்பதில் பொலிட் பீரோ பணி முக்கியமானதாக இருக்கிறது.

தமிழகத்தில் பொலிட் பீரோ உறுப்பினர் பதவிக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com