சீதாராம் யெச்சூரி
சீதாராம் யெச்சூரிpt web

சீதாராம் யெச்சூரி மறைவு|“ஜனநாயகத்திற்கும் மதச்சார்பின்மைக்கும் ஏற்பட்ட இழப்பு” - தலைவர்கள் இரங்கல்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி (72) உடல்நலக் குறைவால் காலமானார்.
Published on

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி (72) உடல்நலக் குறைவால் காலமானார்.

நுரையீரல் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்த சீதாராம் யெச்சூரியின் உடல்நிலை கடந்த சில நாட்களாகவே கவலைக்கிடமாக இருந்து வந்தது. டெல்லியில் உள்ள All India Institute Of Medical Sciences மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவருக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவனையைச் சேர்ந்த மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தபோதும் சிகிச்சை பலனளிக்காமல் சீதாராம் யெச்சூரி உயிரிழந்தார். அவரது உடல் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது.

”இந்திய மதச்சார்பின்மைக்கும் கூட பேரிழப்பு”

சீதாராம் யெச்சூரி மறைவு தொடர்பாக புதியதலைமுறையிடம் பேசிய மூத்த பத்திரிக்கையாளர் என்.ராம், “அரசியல் கொள்கையில் நிறைய பிடிப்பு உண்டு. ஓரளவுக்கு வசதியான குடும்பத்தில் இருந்து வந்தாலும், பெரிய தியாகம் செய்து கட்சியை வளர்த்தவர். அவருக்கு பல மொழிகள் தெரியும். சிபிஎம் கட்சிக்கு மட்டுமல்ல இந்திய ஜனநாயகத்திற்கும் இந்திய மதச்சார்பின்மைக்கும் கூட பேரிழப்பு. அவர் இழப்பை மதிப்பிடவே முடியாது” என தெரிவித்தார்.

சீதாராம் யெச்சூரி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமானார்!

”கொள்கையில் மிகத்தீவிரமாக செயல்பட்டவர்”

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இதுதொடர்பாக கூறுகையில், “இலக்கியம், தத்துவம், வரலாறு என அனைத்திலும் பாண்டித்தியம் பெற்றவர் சீதாராம் யெச்சூரி” என தெரிவித்தார்.

பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், “மாணவர் தலைவராக இருந்து, எவ்வித இடைவெளியும் இன்றி ஒரே கொள்கையில் மிகத்தீவிரமாக செயல்பட்டவர்” என தெரிவித்துள்ளார்.

பாலபாரதி
பாலபாரதி

சிபிஎம் முன்னாள் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி இதுதொடர்பாக கூறுகையில், “உலகளவில் கம்யூனிஸ்ட் நாடுகளில் கூட, வியட்நாம், க்யூபா போன்ற நாடுகளில் உள்ள மாணவர்களுக்கும் சீதாராம் யெச்சூரி என்றால் தெரியும். அத்துனை நெருக்கத்தையும் உறவையும் அங்கிருக்கும் மக்களிடமும் வைத்திருந்தார். இந்தியாவைப் பொருத்தவரை மதச்சார்பற்ற ஜனநாயக அணியை உருவாக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார்” என தெரிவித்தார்.

சீதாராம் யெச்சூரி
பாகிஸ்தானின் கடல் பகுதியில் பெரிய எண்ணெய் வளம் கண்டுபிடிப்பு.. பொருளாதார நெருக்கடி குறையுமா?

”நல்ல தோழமையை இழந்த அதிர்ச்சி”

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறுகையில், “விசிக நடத்திய பல நிகழ்ச்சிகளிலும் மாநாடுகளிலும் பங்கு கொண்டுள்ளார். நல்ல தோழமையை இழந்த அதிர்ச்சி எனக்குள் இருக்கிறது. INDIA கூட்டணி உருவாக்கத்தில் சீதாராம் யெச்சூரியின் பங்களிப்பு மிக முக்கியமானது.

இடதுசாரிகள் இயக்கத்திற்கு பின்னடவை ஏற்படுத்தும் என்ற அச்சத்தை ஏற்படுத்தக் கூடிய அளவுக்கு அவரது மறைவு அமைந்துள்ளது” என தெரிவித்தார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com