உ.பி: மூச்சுத்திணறல் ஏற்பட்ட தாய்க்கு வாயோடு வாய் வைத்து சுவாசம் கொடுத்த மகள்கள்

உ.பி: மூச்சுத்திணறல் ஏற்பட்ட தாய்க்கு வாயோடு வாய் வைத்து சுவாசம் கொடுத்த மகள்கள்

உ.பி: மூச்சுத்திணறல் ஏற்பட்ட தாய்க்கு வாயோடு வாய் வைத்து சுவாசம் கொடுத்த மகள்கள்
Published on

கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வருவதால் மூச்சுத் திணறல் ஏற்பட்ட தாய்க்கு வாயோடு வாய் வைத்து சுவாசம் கொடுத்துள்ள மகள்களின் வீடியோ பார்ப்பவர்களை கலங்க வைத்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. இதனால், அம்மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுவதாக பரவலான தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதனிடைய வெண்டிலேட்டர் படுக்கை கிடைக்காமல் பரிதவித்த மகள்கள், தங்களது தாய்க்கு வாயோடு வாய் வைத்து சுவாசம் அளித்த வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது. 

உத்தர பிரதேசத்தின் பஹ்ரைச் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில், ஸ்ட்ரெச்சரில் கடுமையான மூச்சுத் திணறலுடன் படுத்துக்கொண்டிருந்த தங்கள் தாயின் உயிரை எப்படியாவது காப்பாற்ற வேண்டுமென்று, அவரது இரு மகள்களும் வாயோடு வாய் வைத்து அவருக்கு சுவாசம் வழங்கி உள்ளனர். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து சுகாதாரத்துறையினர் அந்த பெண் நோயாளியை கண்டறிந்து பரிசோதித்தனர். ஆனால் கடுமையான மூச்சுத்திணறல் இருந்ததால் அவர் சிகிச்சைப் பலனின்றி மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.

சில தினங்களுக்கு முன்பு, உத்தரப்பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் வெண்டிலேட்டர் படுக்கை கொண்ட மருத்துவமனை கிடைக்காமல் பரிதவித்த மனைவி தனது கணவருக்கு வாயோடு வாய் வைத்து சுவாசம் அளித்த புகைப்படம் ஒன்று வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் தங்களது தாய்க்கு மகள்கள் வாயோடு வாய் வைத்து சுவாசம் அளித்த வீடியோ ஒன்று வெளியாகியிருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com