‘மன்கிபாத் டு மேன் Vs வைல்ட்’ - மோடியின் பாய்ச்சலை பாராட்டிய பியர் கிரில்ஸ்

‘மன்கிபாத் டு மேன் Vs வைல்ட்’ - மோடியின் பாய்ச்சலை பாராட்டிய பியர் கிரில்ஸ்

‘மன்கிபாத் டு மேன் Vs வைல்ட்’ - மோடியின் பாய்ச்சலை பாராட்டிய பியர் கிரில்ஸ்
Published on

டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் புகழ்பெற்ற நிகழ்ச்சி மேன் Vs வைல்ட். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதன் மூலம் உலகம் முழுவதும் அறியப்படுபவர் பியர் கிரில்ஸ். காடு, வன உயிரினங்களின் தன்மையை விளக்கும் பியர் கிரில்ஸ் காட்டுக்குள் சிக்கினால் உயிர் பிழைப்பது எப்படி என்பது குறித்து நிகழ்ச்சி மூலம் விளக்கம் அளிப்பார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பியர் கிரில்ஸ் உடன் காடுகளில் பயணம் செய்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பியர் கிரில்ஸ், ''180 நாடுகளை சேர்ந்த மக்களுக்கு பிரதமர் மோடியின் மறுபக்கம் தெரிய போகிறது. விலங்கு பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அவர் இந்திய வனப்பகுதிக்கு சென்றுள்ளார்'' எனத் தெரிவித்திருந்தார். 

இதற்கு பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியாவில் பசுமையான காடுகள், அரிய வகை உயிரினங்கள் மற்றும் நீர் நிலைகள் ஆகியவை உள்ளன. இந்த நிகழ்ச்சியை பார்த்தால் இந்தப் பசுமையான பகுதியை நேரில் பார்க்க ஆசை வரும். அத்துடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றியும் தெரியவரும். இந்தியா வந்து இந்த நிகழ்ச்சியை எடுத்ததற்கு பியர் கிரில்ஸிற்கு நன்றி” எனப் பதில் பதிவு செய்திருந்தார். 

இதனையடுத்து கிரில்ஸ் தனது பக்கத்தில், “உங்களுடன் இந்த நிகழ்ச்சியில் பயணித்தது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. நமது முக்கிய நோக்கமான சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நமது பூமியின் பாதுகாப்பு உலகங்கெங்கும் பரவட்டும்” என்று மீண்டும் பதிவிட்டுள்ளார். 

பியர் கிரில்ஸ் மற்றும் பிரதமர் மோடி ஆகிய இருவரும் உத்தராகாண்ட் மாநிலத்திலுள்ள ஜிம்கார்பெட் தேசிய வனவிலங்கு பூங்காவில் இந்த நிகழ்ச்சியை படம் ஆக்கியுள்ளனர். இந்த நிகழ்ச்சி டிஸ்கவரி சேனலில் வரும் ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி ஒளிப்பரப்பாவது குறிப்பிடத்தக்கது.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com