கேரளா: கிராம மக்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என சைலஜா டீச்சர் அறிவிப்பு!
நேற்று மாலை துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு வந்த விமானம் தரையிறங்கும்போது 18 பேர் பலியாகியுள்ளனர். மத்திய மாநில அரசுகள் முழு வீச்சில் செயல்பட்டபோதும், விமானநிலையம் அமைந்திருந்த பகுதிகளில் வாழ்ந்த மக்கள் இவ்விபத்தைக் காண கூடிவிட்டனர்.
இதனால், கொரோனா சூழலால் மீட்புபணிகளில் தாமதம் ஏற்பட்டது. கொரோனா சூழலில் ஊரடங்கு அறிவித்திருப்பதோடு சமூக பரவல் உண்டாவதைத் தடுக்க சமூக இடைவெளியை மாநில அரசுகள் கடைபிடிக்கச் சொல்லியுள்ளன. ஆனால், நேற்றைய விபத்தின்போது கோழிக்கோடு மக்கள் இதனை கடைபிடித்ததாக் தெரியவில்லை.
கூட்டமாக விமான விபத்தை பார்த்தனர். மேலும், விமான விபத்தில் சிக்கிய 40 பேருக்கு கோரோனா தொற்று உறுதியாகியுள்ளது. உயிரிழந்த ஒருவருக்கும் கொரோனா இருந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், “ விமான விபத்தில் பயணிகளை காப்பாற்றும்போது இடையூறுகளை ஏற்படுத்திய கிராம மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள் என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா அறிவித்திருக்கிறார்.