சிக்கிம் மாநில முதல்வராக பதவியேற்றார் தமாங் - நேபாள மொழியில் உறுதிமொழி

சிக்கிம் மாநில முதல்வராக பதவியேற்றார் தமாங் - நேபாள மொழியில் உறுதிமொழி
சிக்கிம் மாநில முதல்வராக பதவியேற்றார் தமாங் - நேபாள மொழியில் உறுதிமொழி

சிக்கிம் மாநில முதல்வராக சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சியின் தலைவர் பிரேம் சிங் தமாங் நேபாள மொழியில் பதவியேற்றுக் கொண்டார்.

சிக்கிம் மாநிலத்தில் கடந்த 1994-ஆம் ஆண்டு முதல் முதலமைச்சராக இருப்பவர் பவன் குமார் சாம்லிங். இவர்தான் இந்தியாவிலேயே நீண்ட காலம் தொடர்ச்சியாக முதலமைச்சராக இருந்தவர் என்ற பெருமையை பெற்றவர். இந்நிலையில் கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி சிக்கிம் மாநிலத்தில் நடந்து ஒரு மக்களவை மற்றும் 32 தொகுதிக்கான சட்டமன்றத் தேர்தலில் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி ஒரு மக்களவை மற்றும் 17 சட்டமன்றத் தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. 

இதனையடுத்து அக்கட்சியின் தலைவர் பிரேம் சிங் தமாங் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு கோரிக்கை விடுத்தார். இந்நிலையில் இன்று சிக்கிம் மாநில முதல்வராக பிரேம் சிங் தமாங் பதவியேற்றுக் கொண்டார். தலைநகர் காங்டாக்கில் உள்ள பல்ஜோர் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆளுநர் கங்கா பிரசாத் அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 

சட்டப்பேரவைத் தேர்தலில் தமாங் போட்டியிடாத நிலையில், அவர் முதல்வராக பதவியேற்றுள்ளார். பதவியேற்பின் போது நேபாள மொழியில் அவர் பிரமாணம் எடுத்துக் கொண்டார். இவ்விழாவில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சியின் தொண்டர்கள், பொதுமக்கள் எனத் திரளானோர் பங்கேற்று, முதல்வருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். 

கடந்த 2013 தொடங்கப்பட்ட சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 32 தொகுதியில் 17 இடங்களில் வெற்றிப் பெற்றததின் மூலம் சிக்கிமில் சாம்லிங் தலைமையிலான 24 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com