இந்தியா
மேக வெடிப்பால் உருக்குலைந்த சிக்கிம் மாநிலம்.. உயிரிழப்பு 26-ஆக உயர்வு!
சிக்கிம் வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது.
மேக வெடிப்பு காரணமாக லாச்சென் பள்ளத்தாக்கில் உள்ள தீஸ்தா ஆற்றில் கடந்த 4-ம் தேதி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், கரையோரத்தில் இருந்த ராணுவ முகாம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில், 22 ராணுவ வீரர்கள் உட்பட 102 பேரை காணவில்லை என மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

sikkim floodpt desk
மேலும் மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 26 ஆக அதிகரித்துள்ள சூழலில், காணாமல் போனவர்களை தேடும் பணி மூன்றாவது நாளாக நீடித்து வருவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.