சிக்கிம் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்; தேசிய கட்சிகள் கால்பதித்திடாத மாநிலத்தில் நிலவரம் என்ன?

சிக்கிம் மாநில சட்டப்பேரவை தேர்தலில் மாநிலக் கட்சியின் ஆதிக்கம் நீடிக்கிறது. ஆளும் எஸ்கேஎம் கட்சி பெருவாரியான இடங்களில் வெற்றிவாகை சூடியுள்ளது. பிரேம் சிங் மீண்டும் முதலமைச்சராக உள்ளார்.
சிக்கிம் முதல்வர்
சிக்கிம் முதல்வர்pt web

சிக்கிம் மாநிலத்தில் உள்ள 32 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் முதற்கட்ட மக்களவை தேர்தல் நாளான ஏப்ரல் 19 அன்றும் வாக்குப்பதிவு நடைபெற்றது. தேசிய கட்சிகள் கால்பதிக்காத அந்த மாநிலத்தில் ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சிக்கும், சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சிக்கும் இடையே போட்டி நிலவியது. கடந்த தேர்தலில் 17 இடங்களில் வென்ற சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி சார்பில் பிரேம் சிங் தமங்க் முதலமைச்சராக பொறுப்பேற்றார். இதன்மூலம், 25 ஆண்டுகால எஸ்டிஎஃப் கட்சியின் ஆட்சி முடிவுக்கு வந்தது.

ஆட்சியை தக்கவைக்க எஸ்கேஎம் கட்சியும், மறுபடியும் ஆட்சிக் கட்டிலில் அமர எஸ்டிஎஃப் கட்சியும் கடுமையாக போராடியதால் சிக்கிமில் தேர்தல்களம் விறுவிறுப்படைந்தது.

சிக்கிம் முதல்வர்
விவாதத்தை கிளப்பிய கருத்துக்கணிப்பு முடிவுகள்; 2014, 2019 தேர்தல்களில் கணிப்புகள் சரியாக அமைந்ததா?

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே ஆளும் கட்சி முன்னிலை வகித்தது. இறுதியில், பிரேம் சிங் தமங்க் தலைமையிலான எஸ்கேஎம் கட்சி 31 தொகுதிகளில் வாகைசூடி பெருவாரியான வெற்றியை பதிவு செய்தது. எதிர்க்கட்சியான எஸ்டிஎஃப் கடந்த தேர்தலில் 15 இடங்களில் வென்ற நிலையில், இந்த தேர்தலில் ஒரேஒரு இடத்தை மட்டுமே கைப்பற்றியுள்ளது.

இதன்மூலம், சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா இரண்டாவது முறையாக ஆட்சியமைக்க உள்ளது. பிரேம் சிங் தமங்க் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். சிக்கிமில் இருக்கும் ஒரு மக்களவை தொகுதிக்கான தேர்தல் முடிவு வரும் நான்காம் தேதி வெளியாக இருக்கிறது.

சிக்கிம் முதல்வர்
”இது மோடி ஊடக கருத்துக்கணிப்பு” - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு குறித்து ராகுல் காந்தி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com