சத்தீஸ்கர்: காயம்பட்ட சகவீரருக்கு தன்னுடைய டர்பனால் கட்டுபோட்ட சிஆர்பிஎஃப் சீக்கிய வீரர்!
சத்தீஸ்கர் மாவோயிஸ்ட் தாக்குதலில் காயம்பட்ட சகவீரருக்கு, ஒரு சீக்கிய வீரர் தனது தலைப்பாகையை (டர்பன்) கழட்டி கட்டுப்போட்ட சம்பவம் நெகிழ்ச்சியை உருவாக்கியிருக்கிறது.
சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மற்றும் பிஜாப்பூர் மாவட்டங்களின் எல்லையில் நடந்த பயங்கரமான மோதலில் மாவோயிஸ்டுகளால் குண்டடிப்பட்ட சகவீரருக்கு, ஒரு சீக்கிய சிஆர்பிஎஃப் படைவீரர் தனது தலைப்பாகையை கழற்றி கட்டுப்போட்டார். இது தொடர்பாக சத்தீஸ்கர் ஐபிஎஸ் அதிகாரி ஆர்.கே.விஜ், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சிஆர்பிஎஃப்) கோப்ரா பிரிவை சேர்ந்த சீக்கிய வீரரின் இந்த செயலுக்கு டிவிட்டரில் வணக்கம் செலுத்தினார்
<blockquote class="twitter-tweet"><p lang="hi" dir="ltr">सिख जवान के जज़्बे को मेरा सलाम। <a href="https://t.co/drcAOWPTpZ">https://t.co/drcAOWPTpZ</a></p>— RK Vij (@ipsvijrk) <a href="https://twitter.com/ipsvijrk/status/1378896056839106562?ref_src=twsrc%5Etfw">April 5, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

