கொரோனாவுக்குப் பிறகு நரம்பியல் சிக்கல்கள் அதிகரிப்பு.. ஆய்வில் தகவல்
கொரோனா தொற்று மற்றும் அதற்கு எதிரான தடுப்பூசிகளின் பக்கவிளைவாக நரம்பியல் பிரச்னைகள் ஏற்படுவது நிம்ஹான்ஸ் ஆய்வில் தெரியவந்துள்ளது. தேசிய மனநலன் மற்றும் நரம்பியல் ஆய்வு நிறுவனமான நிம்ஹான்ஸ், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்பட்ட நரம்பியல் பிரச்னைகள், அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட மனநலப் பிரச்னைகள் குறித்து ஆய்வு நடத்தியது. அதில், பெருந்தொற்றுக்கு பிறகு, மனச்சோர்வு, பதட்டம், அறிவாற்றால் குறைபாடு அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.
கொரோனாவின் முதல் அலையால் பாதிக்கப்பட்ட, 3 ஆயிரத்து 200 நபர்களின் மருத்துவ அறிக்கைகளை நிம்ஹான்ஸ் ஆய்வு செய்தது. அவர்களில் 3.75 சதவிகிதம் பேர் கடுமையான நரம்பியல் பிரச்னைகளை சந்தித்திருப்பது உறுதியாகியுள்ளது. குறிப்பாக, 47 சதவிகிதம் பேர் உணர்ச்சிப்பூர்வமாக மாறியுள்ளனர். 21 சதவிகிதம் பேர் வலிப்பு நோயாலும், 14.2 சதவிகிதம் பேர் வாசனையை நுகரும் தன்மையையும் இழந்துள்ளனர். தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களும் இந்த நரம்பு பிரச்னைகளை சந்திப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.