\
பாக்.கொடுத்த ’கருப்பு கவுதாரி’ பரிசு: சிக்கலில் சித்து

பாக்.கொடுத்த ’கருப்பு கவுதாரி’ பரிசு: சிக்கலில் சித்து

பாக்.கொடுத்த ’கருப்பு கவுதாரி’ பரிசு: சிக்கலில் சித்து
Published on

பாகிஸ்தானில் தனக்கு பரிசாகக் கொடுத்த கருப்பு கவுதாரி பறவையை பஞ்சாப் முதலமைச்சருக்கு கொடுத்த நவ்ஜோத் சிங் சித்து மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து, பஞ்சாப் மாநில சுற்றுலா துறை அமைச்சராக இருக்கிறார். இவர், சமீபத்தில் பாகிஸ்தானில் நடந்த கர்தார்பூர் சிறப்பு பாதை அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்றார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங்கை சந்தித்த சித்து, பாகிஸ்தானில் தனக்கு பத்திரிகையாளர் ஒருவர் கொடுத்த கருப்பு கவுதாரி பறவையை அவருக்கு பரிசாக அளித்தார். இது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

அனுமதியின்றி அந்நிய நாட்டு பறவையை நம் நாட்டுக்கு எடுத்து வந்து, முதல்வருக்கு பரிசளித்தது குறித்து வனவிலங்கு ஆர்வலர் நரேஷ் கட்யான் வனவிலங்கு மையத்தில் புகார் அளித்தார்.

அவர் மீது மற்றொரு புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. லூதியானாவை சேர்ந்த வனவிலங்கு ஆர்வலர் சந்தீப் ஜெயின் என்பவர், கருப்பு கவுதாரி பாதுகாக்கப்படும் வகையிலான பறவையினம். அதை சித்து கூண்டுக்குள் அடைத்து கொண்டு வந்தது குற்றம் என்று கொடுத்த புகாரிலும் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 


 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com