பெரியாரின் 139-வது பிறந்தநாளை தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு கட்சித் தலைவர்கள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் பெரியாருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். அவரது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்தை பதிவிட்டுள்ள அவர், 'சமூக சீர்திருத்தவாதி, பகுத்தறிவாதி, பெரியாரை அவருடைய பிறந்தநாளில் நினைவுகொள்கிறேன். பெரியாரின் கொள்கைகள் தொடர்ந்து இந்த நாட்டை ஊக்குவிக்கும்' என்று பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி பெங்களூரு பேருந்து நிலையத்திற்கு பெரியாரின் பெயர் சூட்டப்படும் என அறிந்திருந்து குறிப்பிடத்தக்கது.