தமிழக அரசு பொது சுகாதார மையங்களில் 86% மருத்துவர்கள் பற்றாக்குறை - ஆய்வு 

தமிழக அரசு பொது சுகாதார மையங்களில் 86% மருத்துவர்கள் பற்றாக்குறை - ஆய்வு 
தமிழக அரசு பொது சுகாதார மையங்களில் 86% மருத்துவர்கள் பற்றாக்குறை - ஆய்வு 

நாடு முழுவதும் உள்ள பொது சுகாதார மையங்களில் 82% டாக்டர்கள் பற்றாக்கு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறையின் தரவுகள் தெரிவித்துள்ளன.

இந்தியாவில்1991ஆம் ஆண்டு முதல் ஜூலை மாதம் 1ஆம் தேதி தேசிய மருத்துவர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் இதன் கோட்பாட்டை இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிவித்து வருகிறது.  இந்த வருடத்திற்கான கோட்பாடாக,‘மருத்துவர்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளை தடுப்போம்’ என்பதாகும். மருத்துவர்களின் உன்னதத்தை போற்றும் நாளாகு இது விளங்குகிறது. 

இந்நிலையில் இந்தியாவில் பொது சுகாதார மையங்களில் போதிய மருத்துவர்கள் இல்லை என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. 

இந்தியாவில் சுகாதாரத்துறையின் முக்கிய தூணாக திகழ்வது ஆரம்ப பொது சுகாதார மையங்கள்தான். இந்தச் சுகாதார மையங்களில் போதுமான மருத்துவர்கள் மற்றும் மருத்துவ வசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டு அதிகளவில் எழுந்தது. இதனை உண்மையாக்கும் விதமாக மத்திய சுகாதாரத்துறையின் தரவுகள் இப்போது வெளியாகி இருக்கின்றன. 

இந்தத் தரவுகளின்படி, இந்தியாவிலுள்ள பொது சுகாதார மையங்களில் 82% மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அறுவைச் சிகிச்சை மருத்துவர்கள், மகப்பேறு மருத்துவர்கள், குழந்தை நல மருத்துவர்கள் ஆகியவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது என்று இந்தத் தரவுகள் தெரிவிக்கின்றன. அத்துடன் இம்மையங்களில் 40% பரிசோதனைக்கூட நிபுணர்களின் பற்றாக்குறை நிலவுவதாகவும் தெரியவந்துள்ளது. 

இந்தப் பற்றாக்குறை அதிகபட்சமாக ஹரியானா, உத்திரப்பிரதேசம்,சத்தீஸ்கர், குஜராத், மேற்குவங்கம் மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் 90% ஆக உள்ளது. அதேபோல தமிழ்நாட்டில் மருத்துவர்கள் பற்றாக்குறை  86% ஆக உள்ளது. அதாவது பொது சுகாதார மையங்களில் தமிழ்நாட்டிற்கு தேவையான மருத்துவர்களின் எண்ணிக்கை 1540ஆக உள்ளது. இதில் தற்போது வெறும் 210 மருத்துவர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். இன்னும் 1330 மருத்துவர்கள் பற்றாக்குறை தமிழ்நாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் இந்தத் தரவுகள் அதிகளவில் மக்கள் தனியார் மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்ற அதிர்ச்சி தகவலையும் சூட்டிகாட்டுகின்றன. எனவே இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் விரைவில் நல்ல முடிவுகளை எடுக்கவில்லை என்றால் பொது சுகாதார மையங்கள் இருந்தும் அவை பயன் இல்லாதவையாக மாறிவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com