கருப்புப் பூஞ்சைக்கான 'ஆம்போடெரிசின்-பி' பற்றாக்குறை தீர்க்கப்படும்: மத்திய அரசு

கருப்புப் பூஞ்சைக்கான 'ஆம்போடெரிசின்-பி' பற்றாக்குறை தீர்க்கப்படும்: மத்திய அரசு
கருப்புப் பூஞ்சைக்கான 'ஆம்போடெரிசின்-பி' பற்றாக்குறை தீர்க்கப்படும்: மத்திய அரசு

'மியூகோமிகோசிஸ்' எனப்படும் கருப்புப் பூஞ்சை தொற்று சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும், 'ஆம்போடெரிசின்-பி' (Amphotericin-B) மருந்தின் பற்றாக்குறை விரைவில் தீர்க்கப்படும் என மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை இணையமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

மேலும் அவர், ‘இந்த மருந்தை இந்தியாவில் உற்பத்தி செய்ய, இன்னும் 3 நாட்களுக்குள், மேலும் 5 மருந்து கம்பெனிகள் அனுமதி பெறும் என்றும், தற்போதுள்ள 6 மருந்து நிறுவனங்கள் இந்த மருந்தின் தயாரிப்பை ஏற்கெனவே அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. 6 லட்சம் 'ஆம்போடெரிசின்-பி' குப்பிகளை இறக்குமதி செய்ய, இந்திய நிறுவனங்கள் ஆர்டர் கொடுத்துள்ளன என்றும், நிலைமையை சுமூகமாக்க, அரசு அனைத்து நடவடிக்கைகளை எடுக்கிறது’ என்றும் அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com