விவசாயிகள் போராட்டத்தில் துப்பாக்கி சூடு: இருவர் பலி!
மத்தியப்பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் இருவர் பலியாகினர்.
வெங்காயம், மற்றும் பருப்புவகை விலைகளை உயர்த்தக்கோரி மத்தியப்பிரதேச மாநிலம், மண்ட்சார் பகுதியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்யக்கோரி அவர்கள் நடத்திய போராட்டம் வன்முறைக் களமாக மாறியது. விவசாயிகளை கட்டுப்படுத்த முயன்ற காவலர்கள் மீதும் அவர்கள் வாகனங்கள் மீதும் கற்கறை வீசித் தாக்குதல் நடத்தினர். அப்போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியில் இருவர் பலியாகினர்.4 பேர் படுகாயமடைந்தனர். வதந்திகள் பரவுவதைத் தடுக்கும் வகையில் மத்திய பிரதேசத்தின் வடக்கு பகுதிகளான இந்தூர், உஜ்ஜைன், டேநாஸ் பகுதிகளில் இணையசேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தின் கிழக்குப்பதியில் அமைந்துள்ள பட்னவார் பகுதியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தின்போது 12 ஆயிரம் லிட்டர் பால் சாலையில் கொட்டப்பட்டது. விவசாயிகளின் தொடர் போராட்டங்களால், அப்பகுதியில் அத்தியாவசியப் பொருட்களான பால், காய்கறி போன்றவற்றிற்கு கடும் தட்டுப்பாடு எழுந்துள்ளது. மத்தியப்பிரதேசத்தில் சவுகான் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.