தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் மீது ஷூ வீசப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
ஓடிசா மாநிலத்தில் உள்ள பீஜிப்பூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைப்பெறவுள்ளது. இதனையடுத்து நடைப்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அம்மாநில முதலமைச்சரும், பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நவீன் பட்நாயக் கலந்துகொண்டு உரையாற்றினார்.மேடையில் அவர் பேசிக் கொண்டிருக்கையில் கூட்டத்தில் இருந்து அடுத்தடுத்து இரண்டு ஷூக்கள் பறந்து வந்தன. சுதாரித்தக் கொண்ட முதல்வர் நவீன் பட்நாயக் தாக்குதலில் இருந்து தப்பினார். மீண்டும் ஷூ வீச்சு சம்பவம் நடந்துள்ளது. அங்கு பணியில் இருந்த காவல் அதிகாரி ஷூக்கள் முதல்வர் மீது விழாமல் தடுத்தார்.
இதற்கிடையில் ஷூ வீசிய நபரை பிடித்த பிஜு ஜனதா தளம் தொண்டர்கள் கடுமையாக தாக்கினர். தொண்டர்களிடம் இருந்து அந்த நபரை மீட்ட காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.