ஊடகங்களின் கவனத்தை பெற பாஜக எம்பி மீது காலணி வீச்சு

ஊடகங்களின் கவனத்தை பெற பாஜக எம்பி மீது காலணி வீச்சு

ஊடகங்களின் கவனத்தை பெற பாஜக எம்பி மீது காலணி வீச்சு
Published on

டெல்லியில் பாஜக எம்.பி. மீது காலணி வீசியவர் விசாரணைக்குப் பின் விடுவிக்கப்பட்டார்.

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜி.வி.எல் நரசிம்மராவ். பாஜக தேசிய செய்தி தொடர்பாளரான இவர், ராஜ்யசபா எம்.பியாக இருக்கிறார். இவர் டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது எங்கிருந்தோ வந்த ஒரு காலணி நரசிம்மராவின் முகத்தை ஒட்டி பறந்து சென்றது. இதையடுத்து அருகிலிருந்தவர்கள் காலணி வீசிய நபரை சுற்றி வளைத்து அழைத்து சென்றனர். 

விசாரணையில், அவர் உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த சக்தி பார்கவ் என்ற மருத்துவர் என தெரியவந்தது. ஊடகங்களின் கவனத்தை பெறும் வகையிலேயே பார்கவ் காலணியை வீசியதாக தெரிவித்தார். இதையடுத்து, அவரை எச்சரிக்கை செய்து டெல்லி போலீஸார் விடுவித்தனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com