\
பத்திரிகையாளர் சந்திப்பில் பரபரப்பு: பாஜக எம்பி மீது ஷூ வீச்சு

பத்திரிகையாளர் சந்திப்பில் பரபரப்பு: பாஜக எம்பி மீது ஷூ வீச்சு

பத்திரிகையாளர் சந்திப்பில் பரபரப்பு: பாஜக எம்பி மீது ஷூ வீச்சு
Published on

பத்திரிகையாளர் சந்திப்பில் இருந்த பாஜக எம்.பி நரசிம்ம ராவ் மீது ஷூ வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜி.வி.எல் நரசிம்மராவ். பாஜக தேசிய செய்தி தொடர்பாளரான இவர், ராஜ்யசபா எம்.பியாக இருக்கிறார். இவர் டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது பத்திரிகையாளர்களுடன் அமர்ந்திருந்த ஒருவர் திடீரென்று நரசிம்ம ராவ் மீது ஷூவை கழற்றி வீசினார். இதனால் பரபரப்பு ஏற்பட் டது. இதையடுத்து அங்கிருந்தவர்கள், அவரைப் பிடித்து தனியே அழைத்துச் சென்றனர். ஏன் இப்படி செய்தார், அவர் யார் என்ற விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை. விசாரித்து வருகின்றனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com