உத்தரபிரதேசம் : கொரோனாவால் உயிரிழந்தவரை ஆற்றில் வீசும் அதிர்ச்சி வீடியோ வெளியாகி பரபரப்பு

உத்தரபிரதேசம் : கொரோனாவால் உயிரிழந்தவரை ஆற்றில் வீசும் அதிர்ச்சி வீடியோ வெளியாகி பரபரப்பு
உத்தரபிரதேசம் : கொரோனாவால் உயிரிழந்தவரை ஆற்றில் வீசும் அதிர்ச்சி வீடியோ வெளியாகி பரபரப்பு

உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்த நபரின் உடலை ஆற்றில் வீசும் ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ வெளிவந்துள்ளது.

இந்த சம்பவத்தை மே 28 அன்று பால்ராம்பூர் மாவட்டத்தில் இருவர் செல்பொனில் படம்பிடித்தனர். அந்த வீடியோவில் இரண்டு ஆண்கள், அவர்களில் ஒருவர் பிபிஇ உடை அணிந்துள்ளார், அவர்கள் ராப்தி ஆற்றின் பாலத்திலிருந்து ஒரு உடலை தூக்கி எறிகிறார். இது குறித்து பேசிய பால்ராம்பூரின் தலைமை மருத்துவ அதிகாரி வி.பி.சிங், "ஆரம்பகட்ட விசாரணையில் நோயாளி மே 25 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், மூன்று நாட்களுக்குப் பிறகு மே 28 அன்று அவர் இறந்தார். கோவிட் நெறிமுறையின்படி, உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் உறவினர்கள் அவரது உடலை ஆற்றில் தூக்கி எறிந்தனர், இதுகுறித்து நாங்கள் வழக்கு பதிவு செய்துள்ளோம், சம்பந்தபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் "என்று கூறினார்.

இந்த மாத தொடக்கத்தில், பீகார் மற்றும் உத்தரபிரதேசத்தின் சில பகுதிகளில் கங்கை நதிக்கரையில் நூற்றுக்கணக்கான உடல்கள் வீசப்பட்டன. அதிகபட்சமாக பக்ஸர் மாவட்டத்தில், 71 சடலங்கள் ஆற்றங்கரையில் இருந்து மீட்கப்பட்டன. கங்கையின் மணல் கரைகளில் புதைந்த நிலையில் ஆயிரக்கணக்கான உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன எனவும் தகவல்கள் வெளியானது. இந்த அதிர்ச்சி செய்தி சில வாரங்களுக்கு முன்பு உலகம் முழுவதும் தலைப்புச் செய்திகளாக அமைந்தன.

இதன்பின்னர் ஆறுகளில் இறந்த உடல்கள் வீசப்படாமல் இருக்க பல வட மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.  மேலும் இதனை தடுக்க நதிக் கரையோரங்களில் ரோந்துப் பணிகளை அதிகரிக்குமாறு மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com