கார் பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி! ஏப்.1 முதல் இந்த கார்கள் விற்பனையில் இருக்காது! காரணம் இதுதான்!

மத்திய அரசின் RDE விதிகள் காரணமாக ஏப்ரல் 1 முதல் இந்தியாவில் பல கார்களின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளன.
Car
CarDriveSpark

மத்திய அரசின் RDE (Real Driving Emission) எனப்படும் மாசு கட்டுப்பாடு விதிகள் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்துள்ளன. இதனால் ஏப்ரல் 1 முதல் இந்தியாவில் பல கார்களின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளன. அப்படி நிறுத்தப்பட்ட சில முக்கியமான கார்களை இந்த பட்டியலில் காணலாம்.

Maruti Suzuki Alto 800

இந்தியாவில் கார் பிரியர்களின் மனதில் என்றும் நீங்காத இடம் பிடித்துள்ள மாருதி சுசுகி ஆல்டோ 800 இப்போது நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கார் விற்பனையில் இப்போதும் போட்டிபோட்டு வந்த நிலையில், அரசின் என்ஜின் விதிகள் காரணமாகவே இது நிறுத்தப்பட்டிருக்கிறது.

cars
cars

Mahindra Alturas G4

டொயோட்டா நிறுவனத்தின் பிரபல Fortuner காருக்கு எதிரான போட்டியாளராக இறக்கப்பட்ட மஹிந்திரா ஆல்ட்டராஸ், இந்தியாவில் பெரியளவில் வரவேற்பை பெறவில்லை. இதனால் இது கடந்த டிசம்பர் மாதமே அதிகாரபூர்வமாக இதன் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

Mahindra KUV 100

மஹிந்திரா நிறுவனத்தின் ஒரே மைக்ரோ எஸ்யுவி கார் ஆன Mahindra KUV 100 தொடர்ந்து விற்பனையில் சரிவை சந்தித்து வந்ததால் நிறுத்தப்பட்டிருக்கிறது.

Mahindra Marazzo

புதிய என்ஜின் விதிமுறைகளால் மஹிந்திரா நிறுவனத்தின் இந்த கார் விடைபெறுகிறது. எம்பிவி செக்மென்ட்டில் போட்டியாளர்களின் கடுமையான போட்டி காரணமாகவும் பிரீமியம் வசதிகள் காரணமாகவும் மஹிந்திரா நிறுவனம் பின்தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

cars
cars

Skoda Superb

இந்த காரும் நல்ல விற்பனையில் இருந்துவந்தாலும் RDE விதிமுறைகள் காரணமாக ஸ்கோடா நிறுவனத்திற்கு அதிக உற்பத்தி செலவு வைத்தது. அதனால் இப்போது நிறுத்தப்படுகிறது.

Skoda Octavia

ஸ்கோடா நிறுவனத்தின் பழமையான கார்களின் ஒன்றாக உள்ள ஆக்டேவியா இந்தியாவில் நிறுத்தப்படுவது கார் பிரியர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com