டார்ச் லைட் வெளிச்சத்தில் கண் அறுவை சிகிச்சை: மருத்துவ அதிகாரி சஸ்பெண்ட்

டார்ச் லைட் வெளிச்சத்தில் கண் அறுவை சிகிச்சை: மருத்துவ அதிகாரி சஸ்பெண்ட்
டார்ச் லைட் வெளிச்சத்தில் கண் அறுவை சிகிச்சை: மருத்துவ அதிகாரி சஸ்பெண்ட்

உத்தரப்பிரதேசத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் டார்ச் லைட் வெளிச்சத்தில் கண் அறுவை சிகிச்சை செய்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவோ மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் போதிய அடிப்படை வசதிகள் இன்றி நிர்வாகம் நடைபெறுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்துள்ளது. அத்துடன் அங்கு போதிய வசதிகள் இன்றியும், டார்ச் லைட் மூலம் அறுவை சிகிச்சைகள் செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இந்நிலையில் டார்ச் லைட் வெளிச்சத்தில் கண் அறுவை சிகிச்சை செய்யும் சில புகைப்படங்கள் சுகாதாரத்துறை அனுப்பட்டுள்ளன.

இதையடுத்து புகாரின் பேரில் அங்கு ஆய்வு மேற்கொண்ட உத்தரப்பிரதேச சுகாதாரத்துறை அதிகாரிகள், சுகாதாரமற்ற முறையில் மருத்துவமனை இருப்பதை கண்டறிந்தனர். அத்துடன் கண் அறுவை சிகிச்சை குறித்து மேற்கொண்ட விசாரணையில், மின்சாரம் துண்டிக்கப்பட்ட நேரத்தில் டார்ச் லைட் வெளிச்சத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதும் கண்டறியப்பட்டது. மேலும் இதேபோன்று அந்த மருத்துவமனையில் 50க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் செய்துள்ளதாகவும் அதிர்ச்சித் தகவல் கிடைத்துள்ளது. இதுபோல் அறுவை சிகிச்சை மேற்கொள்ள பொதுச்சுகாதார மையத்தின் அதிகாரி தான் அனுமதி வழங்கியுள்ளார் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் இந்தச் சம்பவம் தொடர்பாக அரசுத் தலைமை மருத்துவ அதிகாரி மற்றும் பொதுச்சுகாதார மையத்தின் பொறுப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com