இந்தியா
ஆளுநரை சந்திக்கும் சிவசேனா, என்சிபி, காங்கிரசின் திட்டம் ஒத்திவைப்பு
ஆளுநரை சந்திக்கும் சிவசேனா, என்சிபி, காங்கிரசின் திட்டம் ஒத்திவைப்பு
சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் மகாராஷ்டிர ஆளுநரை சந்திக்கும் நிகழ்ச்சி கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் உள்ள நிலையில், ஆட்சியமைக்க சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. ஆட்சியமைப்பதற்கான நடவடிக்கைகளை தொடங்கிவிட்டதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறிய நிலையில், 3 கட்சியினரும் ஆளுநரை இன்று சந்திக்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் மகாராஷ்டிர ஆளுநரை சந்திக்கும் நிகழ்ச்சி கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறைந்த பட்ச செயல் திட்டத்தை இறுதி செய்வது குறித்து நாளை சோனியா காந்தியை தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் சந்திக்க உள்ளார்.