காவல்துறை துப்பாக்கி சூடு: அமைதி திரும்ப உண்ணாவிரதம் உட்கார்ந்த முதலமைச்சர்

காவல்துறை துப்பாக்கி சூடு: அமைதி திரும்ப உண்ணாவிரதம் உட்கார்ந்த முதலமைச்சர்

காவல்துறை துப்பாக்கி சூடு: அமைதி திரும்ப உண்ணாவிரதம் உட்கார்ந்த முதலமைச்சர்
Published on

மத்திய பிரதேசத்தில் விவசாயிகள் ஒருபுறம் போராடிக் கொண்டிருக்க, மாநிலத்தில் அமைதி திரும்ப வலியுறுத்தி முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளார். போபாலில் உள்ள தசரா மைதானத்தில் போராட்டத்தை தொடங்கியுள்ள சிவ்ராஜ் சிங் சவுகான், பேச்சுவார்த்தைக்கு வருமாறு விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். ஆனால் இதுகுறித்து விமர்சித்துள்ள, மார்க்சிஸ் கம்யூனிஸ்ட், சிவ்ராஜ் சிங் சவுகான் கபட நாடகம் நடத்துகிறார் என விமர்சனம் செய்துள்ளது.

மத்தியப் பிரேசத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு 1600 விவசாயிகள் தற்கொலை செய்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இங்கு கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரை 6076 விவசாயிகள் வறட்சியால் தற்கொலை செய்திருப்பதாக, தேசிய குற்ற ஆவண அறிக்கை உணர்த்துகிறது.

டெல்லியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 41 நாட்கள் போராடிய விவசாயிகளை பிரதமர் மோடி ஒருநாள் கூட சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை. தற்போது பாஜக ஆளும், ம.பி.யிலும் விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்காமல், அமைதி திரும்ப வேண்டும் என வலியுறுத்தி வெறும், போராட்டத்தை மட்டும் தொடர்ந்து கொண்டு இருக்கிறார் முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மத்தியப் பிரதேசத்தில் விளை பொருட்களுக்கு உரிய விலை, கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கடந்த 1-ஆம் தேதி போராட்டத்தை தொடங்கினர். கடந்த 5-ஆம் தேதி மான்ட்சர் மாவட்டத்தில் போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதத்தில் மோதல் ஏற்பட, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 விவசாயிகள் உயிரிழந்தனர். பல விவசாயிகள் படுகாயம் அடைந்தனர்.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, "காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் விவசாயிகள் மீது ஏராளமான தாக்குதல்கள் நடத்தப்பட்டது. ம.பி.யில் விவசாயிகள் மீதான துப்பாக்கிச் சூடு எதிர்பாராத ஒன்று" என்றார். உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களை சந்திக்க சென்ற காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியும் கைது செய்யப்பட்டார்.

உயிரிழந்த விவசாயிகளுக்கு ஆதரவாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விவசாயிகள் மீதான துப்பாக்கிச் சூட்டை கண்டித்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடையடைப்பு சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. ஒரு சில இடங்களில் போலீசாரின் வாகனங்களையும், சோதனைச்சாவடிகளையும் தீ வைத்து கொளுத்தப்பட்டு பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் அமைதி திரும்ப சவுஹான் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி இருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com