இந்தியா
''அரசு ஈகோ காட்டக் கூடாது!" - விவசாயிகள் போராட்டக்குழு தலைவரை சந்தித்த சிவசேனா எம்.பிக்கள்
''அரசு ஈகோ காட்டக் கூடாது!" - விவசாயிகள் போராட்டக்குழு தலைவரை சந்தித்த சிவசேனா எம்.பிக்கள்
டெல்லி விவசாயிகள் போராட்டக் குழு தலைவரை, சிவசேனா கட்சியின் எம்பிக்கள் சந்தித்தனர்.
டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை ஒருங்கிணைத்துவரும் பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திக்கைட்டை, டெல்லி - உத்தரப் பிரதேச எல்லைப் பகுதியான காசிப்பூரில் சிவசேனா எம்பிக்கள் சஞ்சய் ராவத் மற்றும் அரவிந்த் சவந்த் சந்தித்தனர்.
இந்தச் சந்திப்பு பற்றி பேசிய சஞ்சய் ராவத் “நாங்கள் திக்கைட்டிடம் பேசினோம், ஒற்றுமையை வெளிப்படுத்தும் எங்கள் செய்தியைத் தெரிவித்தோம். விவசாயிகளுடன் அரசு முறையான வழியில் பேச வேண்டும். ஈகோ நாட்டை இயக்க உதவாது” என்று தெரிவித்தார்.