சிவசேனா பாஜகவின் எதிரி அல்ல: தேவேந்திர ஃபட்னாவிஸ்

சிவசேனா பாஜகவின் எதிரி அல்ல: தேவேந்திர ஃபட்னாவிஸ்
சிவசேனா பாஜகவின் எதிரி அல்ல: தேவேந்திர ஃபட்னாவிஸ்

சிவசேனா பாஜகவின் எதிரி அல்ல என்று மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில் ஆட்சியில் உள்ள சிவசேனா-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கூட்டணியின் 'மகா விகாஸ் அகாதி'யில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக பேச்சுகள் எழுந்து வருகிறது. இதுகுறித்து பேசிய தேவேந்திர ஃபட்னாவிஸ், “அரசியலில் எந்தவிதமான சலனங்களும் இல்லை, நடைமுறையில் உள்ள சூழ்நிலைகளின்படி முடிவுகள் எடுக்கப்படுகின்றன. சிவசேனா பாஜகவின் எதிரி அல்ல, சில விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும். அரசியலில் நடக்காது என்று எதுவும் இல்லை. இருகட்சிக்களுக்கு இடையிலான பிணைப்பு தொடர்பான எந்தவொரு முடிவும் நிலைமையைப் பொறுத்து எடுக்கப்படும்என்று கூறினார்

பட்னாவிஸ் சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். இதனால் பாஜக-சிவசேனா கூட்டணி மீண்டும் உருவாகிறதா என்ற யூகம் எழுந்துள்ளது பற்றிய கேள்விக்கு, "எங்கள் நண்பரான சிவசேனா 2019 சட்டமன்றத் தேர்தலில் எங்களுடன் இணைந்து போட்டியிட்டனர். ஆனால் தேர்தல்களுக்குப் பிறகு, நாங்கள் யாருக்கு எதிராக போட்டியிட்டோமோ அந்த நபர்களுடன் (என்சிபி மற்றும் காங்கிரஸ்) கைகோர்த்து ஆட்சியமைத்தார்" என்று கூறினார்.

சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத், பாஜக தலைவர் ஆஷிஷ் ஷேலரை சந்தித்தது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைக்கு பதிலளித்த சஞ்சய் ராவத், "இதுபோன்ற வதந்திகள் பரவும்போது, எம்.வி. கூட்டணி வலுவாக மாறும். எங்களுக்குள் அரசியல் மற்றும் கருத்தியல் வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் பொது விழாக்களில் நேருக்கு நேர் வந்தால், நாங்கள் ஒருவருக்கொருவர் அன்புடன் வாழ்த்துவோம். நான் ஷேலருடன் வெளிப்படையாக சந்தித்து காபி சாப்பிட்டேன்என்றார்  

மகா விகாஸ் அகாதி கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், வரும் தேர்தல்களில் தனித்து போட்டியிடவுள்ளதாக தெரிவித்தது சர்ச்சையை உருவாக்கியது. ஆனால்  மாநில காங்கிரஸ் தலைமை உத்தவ் தாக்கரே அரசாங்கத்திற்கு முழுமையான ஆதரவு உண்டு என்று தெளிவுபடுத்தியிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com